/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரூ.50க்கு 2 அன்னாசி பழங்கள் காஞ்சியில் விற்பனை
/
ரூ.50க்கு 2 அன்னாசி பழங்கள் காஞ்சியில் விற்பனை
ADDED : ஜூன் 22, 2024 11:34 PM

காஞ்சிபுரம்: தமிழகத்தில் நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையிலும், கேரளா மாநிலத்திலும் அன்னாசி பழம் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது.
இந்நிலையில், கேரளாவில் அன்னாசி பழம் விளைச்சல் அதிகரித்துள்ளதால், காஞ்சிபுரம் வீதிகளில், நடமாடும் வாகனங்களில், இரண்டு அன்னாசி பழம், 50 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து ராணிப்பேட்டையை சேர்ந்த அன்னாசி பழ வியாபாரி ஏ.தங்கராஜ் கூறியதாவது:
சீசன் இல்லாதபோது, முகூர்த்த நாட்களில் ஒரு அன்னாசி பழம் அதிகபட்சமாக 80- - 100 ரூபாய் வரை விற்பனையாகும். தற்போது, கேரள மாநிலத்தில் சீசன் துவங்கி விளைச்சல் அதிகரித்துள்ளதால், வரத்து அதிகரித்துள்ளது. இதனால், 50 ரூபாய்க்கு, இரண்டு அன்னாசி பழம் விற்பனை செய்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.