/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாத்துார் அரசு பள்ளி வாசலில் குவிக்கப்பட்டுள்ள மரக்கிளைகள்
/
மாத்துார் அரசு பள்ளி வாசலில் குவிக்கப்பட்டுள்ள மரக்கிளைகள்
மாத்துார் அரசு பள்ளி வாசலில் குவிக்கப்பட்டுள்ள மரக்கிளைகள்
மாத்துார் அரசு பள்ளி வாசலில் குவிக்கப்பட்டுள்ள மரக்கிளைகள்
ADDED : ஜூன் 22, 2024 11:34 PM

ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்குட்பட்ட, மாத்துாரில் தி.சு.கி., அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையை ஓட்டியுள்ள இந்த பள்ளியின் நுழைவாயில் முன், மின்கம்பிகள் வழியே மின் வழித்தடம் செல்கின்றன.
இந்த நிலையில், பள்ளியின் வெளியில் நெடுஞ்சாலையை ஓட்டியுள்ள மரங்கள் மின்ஒயர் மீது விழுந்து, மின் விபத்து ஏற்படும் விதமாக இருந்தது. இதனால், மின்வாரிய ஊழியர்கள், இரண்டு வாரங்களுக்கு முன் ஜே.சி.பி., வாகனங்கள் வாயிலாக மரத்தை வேருடன் தோண்டினர். அவ்வாறு, தோண்டப் பட்ட மற்றும் வெட்டப்பட்ட மரக்கிளைகள் பள்ளி யின் முன் குவிக்கப்பட்டு உள்ளன.
பள்ளி நுழைவாயில் முன், இரண்டு வாரத்திற்கு மேலாக கிடக்கும் மரக்கிளைகளால் மாணவ - மாணவியர் அவதி அடைந்து வருகின்றனர்.
காற்று வேகமாக வீசும் போது, மாணவர்களின் மீது மரக்கிளைகள் விழும் அச்சத்தில் சென்று வருகின்றனர்.
எனவே, மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் உள்ள மரக்கிளைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்கள் மற்றும்ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.