ADDED : பிப் 23, 2024 11:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒரகடம்:வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில் உள்ள பனப்பாக்கம் அருகே, நேற்று காலை வடமாநில வாலிபர் ஒருவர் சைக்கிளில் சென்றபோது, பின்னால் வந்த, 'டொயோட்டா' கார் மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஒரகடம் போலீசார், உடலை மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார், விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுனரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.