/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிக்கு 'ஏசி' மின்சார ரயில் நுகர்வோர் சங்கம் கோரிக்கை மனு
/
காஞ்சிக்கு 'ஏசி' மின்சார ரயில் நுகர்வோர் சங்கம் கோரிக்கை மனு
காஞ்சிக்கு 'ஏசி' மின்சார ரயில் நுகர்வோர் சங்கம் கோரிக்கை மனு
காஞ்சிக்கு 'ஏசி' மின்சார ரயில் நுகர்வோர் சங்கம் கோரிக்கை மனு
ADDED : ஜூன் 18, 2025 01:02 AM
காஞ்சிபுரம்,:சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வரை இயக்கப்படும் மின்சார 'ஏசி' ரயிலை காஞ்சிபுரம் வரை நீட்டிக்க கோரி, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு சங்க, காஞ்சிபுரம் மாவட்ட செயலர் வழக்கறிஞர் பெர்ரி, மத்திய ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
மனு விபரம்:
சென்னை ரயில்வே கோட்டத்தில், சென்னை, ஆவடி, தாம்பரத்திற்கு அடுத்ததாக, காஞ்சிபுரம் மாநகராட்சியாக தரம் உயர்ந்துள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து தினமும், பணி, கல்வி, தொழில், மருத்துவம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு ரயிலில் சென்று வருகின்றனர்.
கூட்டம்
குறிப்பாக மாவட்ட தலைநகரான காஞ்சிபுரத்தில் இருந்து, ஆயிரக்கணக்கானோர் ரயிலையே நம்பியுள்ளனர். வேலைக்கு செல்பவர்களின் எண்ணிக்கையே ரயிலின் பெரும்பகுதி நிரம்பிவிடும்.
காஞ்சிபுரத்தில் இருந்து, காலை 7:20; 8:15 மணி ஆகிய நேரங்களில் மின்சார ரயில் இயக்கப்பட்டாலும், ரயில் பெட்டிகளில் கூட்டம் குவிவதால் பயணியர் அமர இருக்கை இல்லாமல் கீழே அமர்ந்தும், நிற்க இடமில்லாமலும் பயணியர் சிரமப்படுகின்றனர்.
கோடைக்காலத்தில் இட நெருக்கடியுடன் சென்று வருவதால், பயணியர் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
சமீபத்தில் சென்னை கடற்கரையில் இருந்து, செங்கல்பட்டு வரை, 'ஏசி' புறநகர் ரயில் சேவை துவக்கப்பட்டது.
அதேபோல, தெற்கு ரயில்வே, காஞ்சிபுரத்திற்கும், 'ஏசி' ரயில் சேவையை துவக்கினால், வசதியாக களைப்பின்றி பயணிக்க முடியும்.
நடவடிக்கை
எனவே, காலை, மாலை நேரங்ளில் சென்னை கடற்கரையில் இருந்து, செங்கல்பட்டு வரை இயக்கப்படும், 'ஏசி' ரயில் சேவையை காஞ்சிபுரம் வரை நீட்டிக்கவும், செங்கல்பட்டில் இருந்து, சென்னை கடற்கரை வரை இயக்கப்படும், 'ஏசி' ரயிலை காஞ்சிபுரத்தில் இருந்து துவக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு எங்கள் அமைப்பு சார்பில், கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.