/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மது போதையில் தகராறு ஓட்டுநர் அடித்து கொலை
/
மது போதையில் தகராறு ஓட்டுநர் அடித்து கொலை
ADDED : செப் 02, 2025 01:28 AM
ஸ்ரீபெரும்புதுார், மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில், இருங்காட்டுகோட்டையில், சக ஓட்டுநரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் ராய், 47; ஸ்ரீபெரும்புதுார் அருகே, இருங்காட்டுக்கோட்டையில் தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கன்டெய்னர் லாரி ஓட்டுநராக வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, ராஜ்குமார் ராய், சக ஓட்டுநரான விழுப்புரத்தைச் சேர்ந்தவர் வினோத், 23, என்பவருடன், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் சாலையில் அமர்ந்து மது அருந்தினர்.
அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த வினோத், அருகே இருந்த இரும்பு கம்பியை எடுத்து, ராஜ்குமார் ராய் தலையில் அடித்தார். இதில், மயக்கமடைந்த ராஜ்குமார் ராயை மீட்டு, தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு, மருத்துவர்கள் பரிசோதித்தில், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஸ்ரீபெரும்புதுார் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்தி வினோத்தை, போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.