sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சியில் குப்பை டெண்டர் விவகாரத்தில் முறைகேடு: தனிநபர்கள் அகற்றும் கழிவுக்கும் கணக்கு காட்டி தில்லுமுல்லு

/

காஞ்சியில் குப்பை டெண்டர் விவகாரத்தில் முறைகேடு: தனிநபர்கள் அகற்றும் கழிவுக்கும் கணக்கு காட்டி தில்லுமுல்லு

காஞ்சியில் குப்பை டெண்டர் விவகாரத்தில் முறைகேடு: தனிநபர்கள் அகற்றும் கழிவுக்கும் கணக்கு காட்டி தில்லுமுல்லு

காஞ்சியில் குப்பை டெண்டர் விவகாரத்தில் முறைகேடு: தனிநபர்கள் அகற்றும் கழிவுக்கும் கணக்கு காட்டி தில்லுமுல்லு


ADDED : மே 24, 2025 11:16 PM

Google News

ADDED : மே 24, 2025 11:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில் குப்பை அகற்றுவதில் பெரிய அளவில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்துள்ளது.

தனிநபர்கள் வாயிலாக திருமண மண்டபங்கள், ஹோட்டல்களில் இருந்து அகற்றப்படும் குப்பை கழிவை, மாநகராட்சி குப்பை கிடங்கில் சேர்த்து, அதற்கும் எடை கணக்கிட்டு மாநகராட்சியிடம் பணம் பெறுவதாக ஒப்பந்த நிறுவனம் மீது புகார் எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் பணியாளர் பற்றாக்குறை, டெண்டர் விடுவதில் பிரச்னை, லஞ்ச வழக்கில் சிக்கும் அதிகாரிகள், வணிக நிறுவனங்களுக்கு வரி விதிப்பில் குளறுபடி என, பல்வேறு குளறுபடிகளுக்கு மத்தியில் மாநகராட்சி நிர்வாகம் இயங்கி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக மாநகராட்சி குப்பை விவகாரத்தில் பெரிய அளவில் முறைகேடு நடப்பதாக எழுந்துள்ள விவகாரம், மாநகராட்சியின் சுகாதாரப்பிரிவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் வீடுகள், வணிக குடியிருப்புகளில் இருந்து குப்பை அகற்றும் பணியை தனியார் நிறுவனத்திற்கு மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்தம் விட்டுள்ளது. ஒப்பந்தம் எடுத்த நிறுவனத்திடம் போதிய பணியாளர்கள் இன்றியும், பேட்டரி, சிறிய ரக கனரக வாகனங்கள் இன்றி குப்பை அகற்றும் பணியை சரிவர செய்யவில்லை என, கவுன்சிலர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். மாநராட்சி கூட்டம் நேற்று முன்தினம் நடந்தபோதும், குப்பை அகற்றுவது தொடர்பாக கவுன்சிலர்கள் கூச்சலிட்டனர்.

இதுஒருபுறம் இருக்க, குப்பை அகற்றும் பணியில் பெரிய அளவில் முறைகேடு நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது.

அதாவது, காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள வீடுகளில் இருந்தும், கடைகள், சிறிய வணிக கடைகளில் இருந்தும், சிறிய உணவகங்களில் இருந்து மாநகராட்சி நிர்ணயித்த ஒப்பந்த நிறுவனம் குப்பையை அகற்றி, நத்தப்பேட்டையில் உள்ள குப்பை கிடங்கில் சேகரிக்கிறது.

அங்கு மட்கும் குப்பை, மட்காத குப்பை என பிரிக்கப்படுகிறது. குப்பையின் எடைக்கு ஏற்ப, தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு மாநகராட்சி நிர்வாகம் மாதந்தோறும் பணம் வழங்குகிறது. அவ்வாறு, குப்பையின் எடைக்கு ஏற்ப, 80 லட்ச ரூபாய் முதல் 90 லட்ச ரூபாய் வரை, குப்பை அகற்றுவதற்காகவே மாநகராட்சி நிர்வாகம் வழங்குகிறது.

ஆனால், தனியார் ேஹாட்டல்கள், திருமண மண்டபங்கள், வணிக நிறுவனங்கள், பழச்சாறு கடைகள் என, அதிக அளவிலான குப்பை கழிவுகள் சேகரமாகும் இடங்களில் இருந்து தனிநபர்கள் வாயிலாக டிராக்டரில் சேகரிக்கப்படும் கழிவுகளை நத்தப்பேட்டையில் உள்ள குப்பை கிடங்கில் தனிநபர்கள் சேர்க்கின்றனர்.

அவ்வாறு தனிநபர்கள், ேஹாட்டல்களில் இருந்து பணம் பெற்றுகொண்டு சேகரித்து கொண்டு வரப்படும் டன் கணக்கிலான குப்பை கழிவுகளை, தனியார் ஒப்பந்த நிறுவனம் தாங்கள் சேகரித்து கொண்டு வந்த குப்பை கழிவுகள் என அதற்கும் எடை கணக்கிட்டு, மாநகராட்சி நிர்வாகத்திடம் பணம் பெறுவதாக, தி.மு.க., கவுன்சிலர் கார்த்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

கார்த்தி கூறியதாவது :

திருமண மண்டபம், ேஹாட்டல்களில் இருந்து கழிவுகள் மாநகராட்சி தான் குப்பை கழிவுகளை அகற்றி வந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்த சூழல் மாறி, தனிநபர்கள் வாயிலாக குப்பை கழிவுகள் அகற்றப்படுகின்றன.

திருமண மண்டபம், ேஹாட்டல்களில் இருந்து மாநகராட்சி நிர்வாகமே குப்பையை அகற்ற வேண்டும். அல்லது அதற்கு என தனியாக டெண்டர் விடப்பட்டு, தனியாக அகற்றப்பட வேண்டும். மாநகராட்சிக்கு சம்பந்தமில்லாத தனி நபர்கள், இந்த கழிவுகளை அகற்றி, அதன்வாயிலாக லாபமடைகின்றன்றனர்.

மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. ேஹாட்டல்களில் இருந்தும், தனியார் திருமண மண்டபத்தில் இருந்து எடுத்து செல்லப்படும் குப்பை கழிவுகளை, நத்தப்பேட்டையில் உள்ள மாநகராட்சியின் குப்பை கிடங்கில் சேர்க்கின்றனர். அந்த வாகனங்களை எப்படி அனுமதிக்கன்றனர். அங்குள்ள கண்காணிப்பு கேமிராக்கள் வேலை செய்யவும் இல்லை.

நத்தப்பேட்டையில் தனிநபர்கள் வாயிலாக கொண்டு வரப்படும் டன் கணக்கிலான குப்பையை, தனியார் நிறுவனம் குப்பையை சேகரித்ததாக கணக்கு காட்டி, மாநகராட்சி நிர்வாகம் பணம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

ஒரு டன்னுக்கு 4,700 ரூபாய் மாநகராட்சி நிர்வாகம் தனியார் நிறுவனத்திற்கு வழங்குகிறது. ஆனால், தனிநபர்கள் வாயிலாக திருமணமண்டபங்களில் இருந்து ஒரு நாளைக்கே 5 முதல் 6 டன் வரை சேர்க்கின்றனர்.

இதனால், தனி நபர்களும் சம்பாதிக்கின்றனர். மாநகராட்சிக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இது பெரிய அளவிலான முறைகேடு. அதிகாரிகள் துணை இன்றி இது நடக்காது. மாதந்தோறும் 10 லட்ச ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இவற்றை தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநகராட்சி சுகாதார அதிகாரி அருள்மொழி கூறுகையில், ஓட்டல்கள், திருமண மண்டபங்களில் இருந்து கொண்டு வரப்படும் குப்பை கழிவுகள், மாநகராட்சி குப்பை கிடங்கில் கொட்ட கூடாது எனவும், வேறு இடங்களில் தான். அதுபோன்ற வாகனங்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதுபற்றி, புகார் அளியுங்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகராட்சி மேயர் மகாலட்சுமி சமீபத்தில் நடந்த மாநகராட்சி கூட்டத்தில் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாநகராட்சி வாயிலாக குப்பை அகற்ற நிர்ணயிக்கப்பட்ட வணிக நிறுவனங்களுக்கான கட்டணம்(மாதம் ஒன்றுக்கு):


உணவகம் பெரியது - 1,000
உணவகம் சிறியது - 500
திருமண மண்டபம் - 750 (நிகழ்வு ஒன்றுக்கு)
சினிமா தியோட்டர் - 1,000
டெக்ஸ்டைல் நிறுவனம் - 1,000 முதல் - 2,000 வரை
கிரானைட், டைல்ஸ் விற்பனை - 1,000
அரிசி ஆலை - 1,000 முதல் 1,500 வரை








      Dinamalar
      Follow us