/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பராமரிப்பில்லாமல் உள்ள பொது கழிப்பறை
/
பராமரிப்பில்லாமல் உள்ள பொது கழிப்பறை
ADDED : மே 24, 2025 11:18 PM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், சிலாம்பாக்கம் ஊராட்சியில் வெங்காரம் துணை கிராமம் உள்ளது. இங்கு, 1000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் கடந்த 20 ஆண்டுக்கு முன், சமுதாய கழிப்பிடம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. தற்போது, சமுதாய கழிப்பிடம் முறையாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இங்கு, தண்ணீர் வசதி ஏதும் இல்லாமல், குழாய்கள் உடைக்கப்பட்டு உள்ளன. மேலும், சமுதாய கழிப்பிடத்தில் செடி, கொடிகள் வளர்ந்து உள்ளன. அதிலிருந்து, பாம்பு உள்ளிட்ட விஷஜந்துக்கள் குடியிருப்புகளை நோக்கி வருகின்றன. இதனால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இரவு நேரங்களில் அவ்வழியே அச்சத்துடனே சென்று வருகின்றனர்.
சமுதாய கழிப்பிடத்தை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனம் காட்டி வருகிறது. எனவே, பராமரிப்பின்றி கிடக்கும் சமுதாய கழிப்பிடத்தை, சீரமைக்க ஊரக வளர்ச்சி துறையினர் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.