/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தேசிய நெடுஞ்சாலையில் கீழம்பி சர்வீஸ் சாலை சேதம்
/
தேசிய நெடுஞ்சாலையில் கீழம்பி சர்வீஸ் சாலை சேதம்
ADDED : ஜூன் 26, 2025 12:55 AM

காஞ்சிபுரம்:சென்னை - பெங்களூரு இடையே, தேசிய நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில், தங்க நாற்கர சாலை செல்கிறது. இச்சாலை, 654 கோடி ரூபாய் செலவில், ஆறுவழி சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகின்றன.
சென்னை மதுரவாயல் முதல், ஸ்ரீபெரும்புதுார் வரை, 23 கி.மீ., துாரம் மற்றும் காஞ்சிபுரம் காரப்பேட்டை முதல், ரணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை வரையில், 36 கி.மீ., துார விரிவுபடுத்தும் பணி நிறைவு பெற்றுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் முதல், காஞ்சிபுரம் காரப்பேட்டை வரையில், 34 கி.மீ., மற்றும் துாரம் பணி நடந்து வருகிறது.
இதில், ஆரியபெரும்பாக்கம் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. மேலும், திருப்புட்குழி, தாமல் ஆகிய பகுதிகளில் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகின்றன.
கீழம்பி, ஆரியபெரும்பாக்கம் ஆகிய மேம்பாலங்களை ஒட்டி செல்லும் சர்வீஸ் சாலையில் அதிக வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் செல்லும் போது சாலை சேதம் ஏற்பட்டு, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
இதனால், சர்வீஸ் சாலை ஓரங்களில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, கீழம்பி மற்றும் ஆரியபெரும்பாக்கம் சர்வீஸ் சாலையோரம் புதிதாக சாலை போடும் பணி செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.