/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கீழம்பி புறவழி சாலை விரிவாக்கம் தடுப்பு அமைக்க கோரிக்கை
/
கீழம்பி புறவழி சாலை விரிவாக்கம் தடுப்பு அமைக்க கோரிக்கை
கீழம்பி புறவழி சாலை விரிவாக்கம் தடுப்பு அமைக்க கோரிக்கை
கீழம்பி புறவழி சாலை விரிவாக்கம் தடுப்பு அமைக்க கோரிக்கை
ADDED : ஜூன் 26, 2025 12:54 AM

கீழம்பி:செவிலிமேடு - கீழம்பி புறவழிச்சாலை விரிவாக்கம் செய்வதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ள பகுதியில், தடுப்பு அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
காஞ்சிபுரம், செவிலிமேடு பாலாறு பாலத்தில் இருந்து, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, கீழம்பியில் இணையும் வகையில் புறவழிச் சாலை அமைக்கப்பட்டு உள்ளது.
இச்சாலையில், அதிக பாரம் ஏற்றிச் சென்ற கனரக வாகனங்களால், பல இடங்களில் சாலை சேதமடைந்தும், புழுதி பறக்கும் சாலையாக மாறியது.
மேலும், இச்சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், இருவழி சாலையை நான்குவழிச் சாலையாக மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, செவிலிமேடு -- கீழம்பி புறவழி சாலையை, நான்குவழி சாலையாக மாற்றும் பணி கடந்த பிப்., மாதம் துவங்கியது. தற்போது, கீழ்கதிர்பூர் அருகில் சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது.
சாலை விரிவாக்கத்திற்காக பள்ளம் தோண்டப்பட்ட பகுதியில் சாலை தடுப்பு அமைக்காமல், மணல் மூட்டை அமைத்துள்ளனர்.
இதனால், இரவு நேரத்தில் போதுமான மின்விளக்கு வெளிச்சம் இல்லாத அப்பகுதியில், கனரக வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பிற வாகனங்களும் சாலையோர பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, கீழம்பி புறவழிச் சாலை விரிவாக்கத்திற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ள பகுதியில், சாலை தடுப்பு அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.