/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நான்குவழி சாலை மைய இடைவெளியால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
நான்குவழி சாலை மைய இடைவெளியால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
நான்குவழி சாலை மைய இடைவெளியால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
நான்குவழி சாலை மைய இடைவெளியால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : செப் 29, 2025 12:53 AM

காஞ்சிபுரம்:நான்குவழி சாலை மைய இடைவெளியால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்டத்தில், செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - சதுரங்கப்பட்டினம் சாலை, 448 கோடி ரூபாய் செலவில் நான்குவழிச் சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.
இருப்பினும், வாலாஜாபாத் புறவழிச் சாலை போடும் பணிக்கு, கிதிரிப்பேட்டை மற்றும் புளியம்பாக்கம் பகுதியில், ரயில்வே மேம்பாலம் இணைக்கும் பணி நிறைவு பெறவில்லை.
எனினும், காஞ்சிபுரம் - செங்கல்பட்டு இடையே, நான்குவழி சாலை விரிவுபடுத்தும் பணி, 80 சதவீதம் நிறைவு பெற்றிருப்பதால், சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளன.
இருப்பினும், வாலாஜாபாத் அடுத்த, புளியம்பாக்கம் கிராமம் முதல், பழையசீவரம் வரையில், சாலை மைய தடுப்புகளில் ஆங்காங்கே இடைவெளி விட்டுள்ளனர். அந்த இடைவெளியில் தடுப்பு ஏற்படுத்தவில்லை.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ஒரு சாலை மார்க்கத்தில் இருந்து, அடுத்த சாலை மார்க்கத்திற்கு, குறுக்கே வாகனங்களை ஓட்ட வேண்டி உள்ளது. இதுபோன்ற நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என, வாகன ஓட்டிகள் இடையே புலம்பலை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, காஞ்சிபுரம் - செங்கல்பட்டு இடையே நான்குவழிச் சாலை மைய தடுப்புகளில் தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

