/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாணவ - மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்கல்
/
மாணவ - மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்கல்
ADDED : ஜூன் 22, 2025 08:37 PM
காஞ்சிபுரம்:அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ - மாணவியருக்கு காஞ்சிபுரம் தொண்டை மண்டல வேளாளர் சங்கம் சார்பில், ஊக்க பரிசு, சான்ழிதழ், கேடயம் வழங்கும் விழா நேற்று காஞ்சிபுரத்தில் நடந்தது.
தொண்டை மண்டல வேளாளர் சங்க பேரவை கூட்டம் மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ --- மாணவியருக்கு ஊக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கும் விழா, தொண்டை மண்டல வேளாளர் சங்க மாநில தலைவர் எல்லப்பன் தலைமையில் நேற்று நடந்தது.
இதில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம். டாக்டர் சுசித்ரா ராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
இதில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த 50க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை சான்றுகள் கேடயம் வழங்கப்பட்டன. மாநில செயலர் பூபதி, மாநில பொருளாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.