/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மக்கள் குறைதீர் கூட்டம்: 418 மனுக்கள் ஏற்பு
/
மக்கள் குறைதீர் கூட்டம்: 418 மனுக்கள் ஏற்பு
ADDED : செப் 15, 2025 11:21 PM
காஞ்சிபுரம்;காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில், 418 பேர் பல்வேறு கோரிக்கை தொடர்பாக, கலெக்டர் கலைச் செல்வியிடம் மனுக்களை வழங்கினர்.
காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று நடந்தது.
இதில், ஆக்கிரமிப்பு, பட்டா, உதவித்தொகை, வேலைவாய்ப்பு என, பல்வேறு வகையான கோரிக்கை தொடர்பாக 418 பேர் மனுக்கள் வழங்கினர்.
மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் கலைச்செல்வி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரி களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.