/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நெற்பயிருக்கு 'ட்ரோன்' மூலம் மருந்து தெளிப்பு
/
நெற்பயிருக்கு 'ட்ரோன்' மூலம் மருந்து தெளிப்பு
ADDED : செப் 16, 2025 12:11 AM

காஞ்சிபுரம்:நெற்பயிருக்கு, 'ட்ரோன்' கருவி மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் வட்டாரங்களில் 25,000 ஏக்கரில் சம்பா பருவ நெல் சாகுபடி செயயப்பட்டு உள்ளது.
கடந்த ஜூன், ஜூலையில் சாகுபடி செய்த விளை நிலங்களில் நெற்பயிர் கதிர் எடுக்கும் தருவாயில் உள்ளன. இந்த நேரத்தில் அதிகமான ஈரப்பதம் இருக்கக்கூடாது. ஆனால், சில தினங்களாக, இரவு நேரங்களில் மழை பெய்வதும், பகல் நேரங்களில் வெயில் அடிப்பதுமாக சீதோஷ்ண நிலை உள்ளது.
அதனால், நெற்கதிரில் புகையான் நோய் தாக்குதல் ஏற்படும். இதை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து தெளிப்பது அவசியம்.
நேற்று, கம்மவார் பாளையம், கோவிந்தவாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சாகுபடி செய்த நெற்பயிருக்கு, 'ட்ரோன்' கருவி மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணியை விவசாயிகள் துவக்கியுள்ளனர்.
இதுகுறித்து, கம்மவார்பாளையம் கிராம விவசாயி ஒருவர் கூறுகையில், 'இடுப்பளவிற்கு நெற்கதிர் வளர்ந்துள்ளது. இதுபோன்ற நேரங்களில் ஆட்கள் மூலமாக பூச்சிக்கொல்லி மருத்து தெளிக்க முடியாது. அதனால், 'ட்ரோன்' கருவி மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து வருகிறோம்' என்றார்.