/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தடுப்புச்சுவரின்றி வேகவதியாற்று பாலம் பீதியில் பொதுமக்கள்
/
தடுப்புச்சுவரின்றி வேகவதியாற்று பாலம் பீதியில் பொதுமக்கள்
தடுப்புச்சுவரின்றி வேகவதியாற்று பாலம் பீதியில் பொதுமக்கள்
தடுப்புச்சுவரின்றி வேகவதியாற்று பாலம் பீதியில் பொதுமக்கள்
ADDED : பிப் 06, 2024 05:36 AM

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகம் பின்புறம் அமைந்துள்ளது தாயார்குளம். அப்பகுதி நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.
மேலும், இக்குளத்தில், நீத்தார் வழிபாடு, மாதாந்திர அமாவாசை, மகாளய அமாவாசை உள்ளிட்ட நாட்களில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கமாக உள்ளது.
பிள்ளையார்பாளையம் பகுதியில் இருந்து தாயார்குளத்திற்கு செல்லும் சாலையின் குறுக்கே வேகவதி ஆறு குறுக்கிடும் இடத்தில் சிறுபாலம் கட்டப்பட்டுள்ளது.
இப்பாலத்திற்கு தடுப்புச்சுவர் அரைகுறையாக உள்ளது. இதனால், இரவு நேரத்தில் சிறுபாலத்தை கடக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஆற்றில் விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, சிறுபாலத்திற்கு முழுமையாக தடுப்புச்சுவர் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.