/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
ஆதரவற்றோர் இல்லத்தில் இறுதிச்சடங்கிற்கு பணம் வைத்து விட்டு முதியவர் தற்கொலை

ADDED : ஜூன் 21, 2025 09:15 PM
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கியிருந்த முதியவர் இறப்பு செலவு, பரோட்டா கடைக்காரருக்கான பாக்கி என பணத்தை தனித்தனியாக வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அருமனை அருகே மாங்கோடு புலியூர் சாலை பாறைகுளம் பகுதியில் தனியார் ஆதரவற்றோர் இல்லம் உள்ளது. தற்போது அது பயன்பாடு இல்லாமல் பூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரள மாநிலம் செம்பூரைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க தியாகராஜ் வந்து தனக்கு யாரும் ஆதரவில்லை என்றும் இல்லத்தில் தங்கிக் கொள்வதாகவும் கூறியுள்ளார். அங்கிருந்தபடி பழைய இரும்பு பொருட்கள், பாட்டில்களை சேகரித்து அதை விற்று கிடைக்கும் பணத்தை வைத்து வாழ்ந்து வந்தார்.
நேற்று காலை அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கிடந்தார். இறப்பதற்கு முன்பு கடிதம் எழுதி வைத்து விட்டு இறுதிச் சடங்கு செலவு மற்றும் பரோட்டா கடைக்காரருக்கு கொடுக்க வேண்டிய பாக்கி என பணத்தை வைத்திருந்தார். அருமனை போலீசார் விசாரித்து வருகின்றனர்.