/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
பூட்டிய வீட்டில் இன்ஜினியர் உடல் மீட்பு
/
பூட்டிய வீட்டில் இன்ஜினியர் உடல் மீட்பு
ADDED : ஜூன் 21, 2025 09:17 PM
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் ஜெகன் கோபால் 50. அமெரிக்காவில் இன்ஜினியராக வேலை செய்தார். மனைவியும் அமெரிக்காவில் வேலை செய்கிறார். ஜெகன் கோபாலுக்கு நடக்க முடியாதளவு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து சிகிச்சைக்காக சொந்த ஊருக்கு வந்தார். தாயாருடன் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். தாயார் பெங்களூருவில் உள்ள மகள் வீட்டுக்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த ஜெகன் கோபால் உறவினர்களை அழைத்து உணவு வாங்கி சாப்பிட்டும், கார் வரவழைத்து மருத்துவமனைக்கு சென்றும் வந்தார்.
மூன்று நாட்களாக கோபால் வீட்டு கதவு திறக்கப்படாமல் இருந்ததால் அருகில் உள்ளவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். போலீசார் கதவை உடைத்து பார்த்த போது கட்டில் அருகில் தரையில் இறந்து கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. இரணியல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.