/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆக.,3ல் ஆடி 18ம் பெருக்கு உள்ளூர் விடுமுறை கோரி மனு
/
ஆக.,3ல் ஆடி 18ம் பெருக்கு உள்ளூர் விடுமுறை கோரி மனு
ஆக.,3ல் ஆடி 18ம் பெருக்கு உள்ளூர் விடுமுறை கோரி மனு
ஆக.,3ல் ஆடி 18ம் பெருக்கு உள்ளூர் விடுமுறை கோரி மனு
ADDED : ஜூலை 23, 2024 01:34 AM
கரூர் : ஆகஸ்ட் 3ல் வரும் ஆடி 18ம் பெருக்கை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட செயலாளர் மூர்த்தி, கரூர் கலெக்டர் அலு-வலக பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தார். அதில், கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பல நுாற்றாண்டுகளாக ஆடி பெருக்கு கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், காவிரி ஆற்றை தங்களது தாயாக கருதி ஆடிப்பெருக்கு, அதாவது ஆடி 18ம் நாள் அன்று காவிரி கரையில் பூஜைகள் நடத்தி வழிபாடு நடத்துவது வழக்கம். ஆடி பெருக்கு விழா வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி வர இருப்பதால், காவிரி கரையில் உள்ள கரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்தால் மக்கள் இந்த விழாவை சிறப்பாக கொண்டாட வழி பிறக்கும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.