/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பள்ளப்பட்டி நகராட்சி பகுதியில் வெறி நாய்கள் அட்டகாசம்
/
பள்ளப்பட்டி நகராட்சி பகுதியில் வெறி நாய்கள் அட்டகாசம்
பள்ளப்பட்டி நகராட்சி பகுதியில் வெறி நாய்கள் அட்டகாசம்
பள்ளப்பட்டி நகராட்சி பகுதியில் வெறி நாய்கள் அட்டகாசம்
ADDED : ஜூலை 23, 2024 01:21 AM
அரவக்குறிச்சி : அரவக்குறிச்சி அருகே, பள்ளப்
பட்டி பகுதியில், 2,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். அதில், பெரும்பாலான வீடுகளில் ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளப்-பட்டி மேற்கு தெரு பகுதியில் வளர்த்து வரும் ஆடு, கோழி-களை, வெறிநாய்கள் கடித்து குதறியதில் குடல்கள் வெளியே சரிந்த நிலையில் இறந்து கிடந்தன.
இதனால் அதிர்ச்சியடைந்த குடியிருப்பு வாசிகள், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி, பள்ளப்பட்டி நகராட்சிக்கு பலமுறை புகார் மனு அளித்துள்ளனர். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை. அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமராக்களில் பதிவான காட்சி-களை பார்த்தபோது, சுற்றித்திரியும் வெறிநாய்கள், ஆடு, கோழி-களை கடித்து குதறி வருவது தெரியவந்தது. மேலும், குழந்-தைகள் தெருவில் விளையாடிக்கொண்டிருக்கும் போது துறத்திக்-கொண்டு கடிக்க வருகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்-துடன் வசித்து வருகின்றனர். இதனால், வெறிநாய்களின் அட்ட-காசத்திற்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.