/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலையோரம் குவித்துள்ள இயற்கை உரத்தால் சிரமம்
/
கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலையோரம் குவித்துள்ள இயற்கை உரத்தால் சிரமம்
கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலையோரம் குவித்துள்ள இயற்கை உரத்தால் சிரமம்
கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலையோரம் குவித்துள்ள இயற்கை உரத்தால் சிரமம்
ADDED : ஜூலை 23, 2024 01:22 AM
கி.புரம் : கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலையோர பகுதிகளில், விவசாயிகள் கொட்டி வைத்துள்ள இயற்கை உரத்தால், அந்த வழியாக எளி-தாக செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலை, மஞ்சமேடு பகுதியில் இருந்து பிச்சம்பட்டி, கோவக்குளம், பழைய ஜெயங்-கொண்டம், பஞ்சப்பட்டி வரை செல்கிறது. இந்த சாலை வழி-யாக மக்கள் வாகனங்களில் பயணித்து வருகின்றனர். இந்த நெடுஞ்சாலையின் இருபுறமும் விளை நிலங்கள் உள்ளன. இந்த விளை நிலங்களில் அதிகமாக வெற்றிலை சாகுபடி நடந்து வருகி-றது. வெற்றிலை சாகுபடிக்கு தேவையான இயற்கை உரங்களை, விவசாயிகள் கொண்டு வந்து சாலையோரம் கொட்டி குவித்து வைத்துள்ளனர்.
பின், கொஞ்சம் கொஞ்மாக விளை நிலங்களுக்கு கொண்டு செல்கின்றனர். சாலையோரம் கொட்டி வைத்துள்ள இயற்கை உரத்தால், அந்த வழியாக வாகன ஓட்டிகள் எளிதாக செல்ல முடியாமல் சிரமப்பட்டு செல்கின்றனர். விளைநிலங்-களின் உள்பகுதியில் கொட்டும் வகையில் நெடுஞ்சாலைத்துறை-யினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.