/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் ஆர்ப்பாட்டம் நடத்திய ஹிந்து முன்னணியினர் கைது
/
கரூரில் ஆர்ப்பாட்டம் நடத்திய ஹிந்து முன்னணியினர் கைது
கரூரில் ஆர்ப்பாட்டம் நடத்திய ஹிந்து முன்னணியினர் கைது
கரூரில் ஆர்ப்பாட்டம் நடத்திய ஹிந்து முன்னணியினர் கைது
ADDED : ஜூலை 22, 2024 08:38 AM
கரூர் : ஹிந்து சமய கோவில்களை பாதுக்காக கோரியும், கோவில்களை விட்டு தமிழக அரசு வெளியேற கோரியும், நேற்று தமிழகம் முழுதும் ஹிந்து முன்னணி சார்பில், ஆர்ப்பாட்டம் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், கரூர் தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த, ஹிந்து முன்னணி நிர்வாகிகளுக்கு, கரூர் டவுன் போலீசார் அனுமதி மறுத்து தடைவிதித்-தனர். இந்நிலையில், தடையை மீறி நேற்று காலை, 11:00 மணிக்கு கரூர் தலைமை தபால் நிலையம் முன், மாநகர தலைவர் ஜெயம் கணேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்தி, பொருளாளர் ரமேஷ்குமார் மற்றும் ஆறு பெண்கள் உள்பட, 54 பேரை கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.
* இதேபோல், குளித்தலையில் நடந்த ஆர்ப்பாட்-டத்தில் ஈடுபட்ட, ௬௦ பேரை போலீசார் கைது செய்தனர்.