/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை செல்லாது கரூர் மாவட்ட மக்கள் அதிர்ச்சி
/
மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை செல்லாது கரூர் மாவட்ட மக்கள் அதிர்ச்சி
மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை செல்லாது கரூர் மாவட்ட மக்கள் அதிர்ச்சி
மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை செல்லாது கரூர் மாவட்ட மக்கள் அதிர்ச்சி
ADDED : ஜூலை 22, 2024 08:36 AM
கரூர் : மங்களூருவில் இருந்து கரூர் வழியாக, சென்னை எழும்பூர் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல், 26 நாட்களுக்கு திருச்சியில் நிறுத்-தப்படும். இதனால், கரூர் மாவட்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கர்நாடகா மாநிலம், மங்களூருவில் இருந்து கரூர் வழியாக, சென்னை எழும்பூருக்கு நாள்-தோறும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், கரூருக்கு இரவு, 7:50 மணிக்கு சென்று விட்டு, 8:00 மணிக்கு, சென்னை எழும்பூ-ருக்கு செல்லும். அதேபோல், சென்னை எழும்-பூரில் இருந்து இரவு, 11:15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 6:30 மணிக்கு கரூர் வந்து விட்டு, மங்களூருக்கு புறப்பட்டு செல்லும். இந்நி-லையில், தாம்பரம் ரயில்வே யார்டு சீரமைப்பு பணிகள் இன்று முதல் தொடங்குகிறது. இதனால், மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை எழும்பூர் வரை இன்று முதல் வரும் ஆக., 16 வரை, 26 நாட்களுக்கு இயக்கப்படாமல், திருச்சியில் நிறுத்தப்படும்.
அதேபோல், மறுமார்க்கத்தில், நாளை முதல் வரும் ஆக., 17 வரை சென்னை எழும்பூருக்கு பதிலாக, மங்களூருக்கு திருச்சியில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என, தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால், கரூர் மாவட்ட பொது மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
இதுகுறித்து, கரூர் மாவட்ட மக்கள் கூறியதாவது: கரூரில், ஜவுளி, கொசுவலை, பஸ் பாடி கட்டும் தொழில்கள் முதன்மையாக உள்ளன. இதனால், கரூரில் இருந்து நாள்தோறும் தொழில் அதி-பர்கள், வியாபாரிகள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் இரவு நேரத்தில் சென்னை செல்-லவும், திரும்பி கரூர் வரவும், மங்களூரு எக்ஸ்-பிரஸ் ரயிலை பயன்படுத்தி வருகிறோம். இந்நி-லையில், பராமரிப்பு காரணங்களுக்காக மங்க-ளூரு எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை எழும்பூருக்கு, 26 நாட்களுக்கு செல்லாது என்ற அறிவிப்பால் அதிர்ச்சியாக உள்ளது. இதனால், கேரளா மாநிலம் பாலக்காட்டில் (பழநி எக்ஸ்பிரஸ் ரயில்) இருந்து, சென்னை சென்ட்ரலுக்கு சேலம் வழியாக இயக்கப்படும், மற்றொரு இரவு நேர ரயிலில், கரூர் மாவட்ட பொதுமக்களுக்கு உரிய இடங்களை தனியாக ஒதுக்க, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.