/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ப.வேலுார் பஸ் ஸ்டாண்டில் இடையூறு வாகனங்கள் பறிமுதல்
/
ப.வேலுார் பஸ் ஸ்டாண்டில் இடையூறு வாகனங்கள் பறிமுதல்
ப.வேலுார் பஸ் ஸ்டாண்டில் இடையூறு வாகனங்கள் பறிமுதல்
ப.வேலுார் பஸ் ஸ்டாண்டில் இடையூறு வாகனங்கள் பறிமுதல்
ADDED : ஜூன் 08, 2024 02:21 AM
ப.வேலுார்: ப.வேலுார் பஸ் ஸ்டாண்டில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் பஸ் ஸ்டாண்டிற்கு சேலம், நாமக்கல், மதுரை, தேனி, கோயம்புத்துார், திருச்சி, மோகனுார், முசிறி, கரூர் ஆகிய பகுதிகளுக்கு பஸ்கள் சென்று வருகின்றன. இதனால் பயணிகள் கூட்டம் எப்போதும் அதிகரித்தே காணப்படும். இந்நிலையில், ப.வேலுார் பஸ் ஸ்டாண்ட் மணிக்கூண்டு அருகே, ஆட்டோ, இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, நேற்று ப.வேலுார் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி, எஸ்.ஐ., குமார் மற்றும் போலீசார், ப.வேலுார் பஸ் ஸ்டாண்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, மூன்று ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மீண்டும், இதுபோன்று போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தினால், வாகனங்கள் பறிமுதல் செய்வதோடு, அபராதம் விதிக்கப்படும் என, இன்ஸ்பெக்டர் ரங்கசாமி எச்சரிக்கை விடுத்தார்.