/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தொடர் மழையால் சேதம்: நிவாரணம் தர அரசுக்கு கோரிக்கை
/
தொடர் மழையால் சேதம்: நிவாரணம் தர அரசுக்கு கோரிக்கை
தொடர் மழையால் சேதம்: நிவாரணம் தர அரசுக்கு கோரிக்கை
தொடர் மழையால் சேதம்: நிவாரணம் தர அரசுக்கு கோரிக்கை
ADDED : ஜூன் 07, 2024 12:40 PM

குளித்தலை: குளித்தலையில் ஏழு ஏக்கரில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாரான அல்வா பூசணி தொடர்ந்து பெய்த மழையால் அழுகி சேதம் ஏற்பட்டது. உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ராஜேந்திரம் ஊராட்சி பரளி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்சிங், வயது 45. இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான 7 ஏக்கர் விவசாய நிலத்தில் அல்வா பூசணிக்காய் பயிரிட்டுள்ளார். குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 5 நாட்களாக மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது. இதில் விவசாயி மோகன் சிங் பயிரிடப்பட்ட அல்வா பூசணிக்காய் 7 ஏக்கர் நிலத்தில் மழைநீர் தேங்கியதால் அல்வா பூசணிக்காய் அனைத்தும் நீரில் மூழ்கி அழுகியது.
சுமார் ஏக்கருக்கு ஒரு லட்சம் வரை செலவு செய்த நிலையில், 7 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட அல்வா பூசணிக்காய் அனைத்தும் நீரில் மூழ்கி அழுகியதால் தனக்கு 7 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், பயிரிடப்பட்ட அல்வா பூசணிக்காய் முழுவதும் அறுவடை செய்தால் சுமார் பத்து லட்சம் முதல் 15 லட்சம் வரை வருவாய் பெரும் நிலையில் இருந்து வந்ததாகவும் மோகன்சிங் தெரிவித்தார்.
இந்நிலையில் தொடர்ந்து பெய்த மழை தண்ணீர் வெளியேற வடிகால் இல்லாததால் வடிகால் ஆக்கிரமிப்பினால் தண்ணீர் செல்ல வழியின்றி உள்ளதாகவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பயிரிடப்பட்ட அல்வா பூசணி நிலத்தை நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.