/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
க.பரமத்தியில் கால்நடை தீவன சந்தை ஏற்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்
/
க.பரமத்தியில் கால்நடை தீவன சந்தை ஏற்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்
க.பரமத்தியில் கால்நடை தீவன சந்தை ஏற்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்
க.பரமத்தியில் கால்நடை தீவன சந்தை ஏற்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஜன 17, 2024 11:31 AM
க.பரமத்தி: 'க.பரமத்தியில், கால்நடை தீவன சந்தை அமைக்க நடவடிக்கை வேண்டும்' என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
க.பரமத்தி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. இதற்காக பலர் தங்களது தோட்டத்தில் தீவனப் பயிர்களான கம்பு ஒட்டுப்புல், கினியாபுல், கொழுக்கட்டைப் புல் மற்றும் பயறு வகையில், வேலிமசால், குதிரைமசால், முயல் மசால், தீவன தட்டைப் பயறு போன்றவற்றை பயிரிட்டு கால்நடைகளுக்கு உணவாக கொடுத்து வருகின்றனர்.
தீவன பயிர்களை வளர்க்க நிலம் இல்லாத விவசாயிகள் சிலர் தோட்டங்களை குத்தகைக்கு எடுத்து கால்நடைகளை பராமரித்து வருகின்றனர். இதுமட்டுமல்லாது கால் நடைகளை சாலையோரத்தில் மேயவிட்டு வளர்த்து வருகின்றனர். கால்நடைகளை தன்னிச்சையாக மேய விடும்போது தோட்டங்கள் மற்றும் பயிர்களில் புகுந்து சேதப்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே, கால்நடைகளை விற்பனை செய்ய சந்தைகள் இருப்பதைப் போன்றே, கால்நடை தீவனங்களை தயாரிக்கும் விவசாயிகளிடம், தீவனங்களை பெற ஏதுவாக தீவன சந்தை அமைக்க வேண்டும்.
கால்நடைகளை விற்க பல்வேறு பகுதிகளில் சந்தைகள் உள்ளன. இதுபோல போதுமான நிலம் இல்லாத நிலையில், அரசு இலவச ஆடு வழங்கும் திட்டத்தில் பெறப்பட்ட கால்நடைகளை வளர்க்க, தீவன சந்தை அமைக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

