/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு ஊழியர் சங்க வரவேற்பு குழு கூட்டம்
/
அரசு ஊழியர் சங்க வரவேற்பு குழு கூட்டம்
ADDED : ஜூலை 22, 2024 08:46 AM
கரூர் : தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க, கரூர் மாவட்ட கிளை வரவேற்பு கூட்டம், மாவட்ட தலைவர் கருணாகரன் தலைமையில், வெங்கமேட்டில் நடந்தது. கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்-டத்தை மீண்டும் கொண்டு வருவோம் என, முதல்வர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி கொடுத்து விட்டு, அதை நிறைவேற்றாதது குறித்தும், வரும் அக்., 5, 6ல் கரூரில் நடக்க உள்ள மாநில மாநாட்டில், போராட்டங்கள் குறித்து முடிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
கூட்டத்தில், மாநில தலைவர் தமிழ்செல்வி, பொதுச்செயலாளர் லட்சுமி நாராயணன், பொரு-ளாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட பொரு-ளாளர் சிங்கராயர், நிர்வாகிகள் மகாவிஷ்ணன், விஜயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.