/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்டத்தில் தீவிர வாகன சோதனை: களத்தில் இறங்கிய எஸ்.பி.,
/
கரூர் மாவட்டத்தில் தீவிர வாகன சோதனை: களத்தில் இறங்கிய எஸ்.பி.,
கரூர் மாவட்டத்தில் தீவிர வாகன சோதனை: களத்தில் இறங்கிய எஸ்.பி.,
கரூர் மாவட்டத்தில் தீவிர வாகன சோதனை: களத்தில் இறங்கிய எஸ்.பி.,
ADDED : ஜூலை 13, 2024 08:18 AM
கரூர்: கரூர் மாவட்டத்தில், நேற்று பல்வேறு இடங்களில் போலீசார், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.தமிழகம் முழுவதும் திருட்டு உள்ளிட்ட, குற்ற செயல்களை தடுக்-கவும், குற்றவாளிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட, காவல் துறை முடிவு செய்துள்ளது.அதன்படி, நேற்று மாலை கரூர் மாவட்டத்தில் கரூர் டவுன், கரூர் ரூரல், குளித்தலை உட்கோட்ட காவல் துறை சார்பில், 10 க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன சோதனை நடந்தது.
அதில், 100க்கும் மேற்பட்ட போலீசார் கார், வேன் உள்ளிட்ட வாகனங்-களில் தீவிரமாக சோதனை நடத்தினர். கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலை முனியப்பன் கோவில் பகு-தியில், எஸ்.பி., பிரபாகர் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்-போது, கரூர் டவுன் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷகிரா பானு உள்ளிட்ட போலீசார் உடனிருந்தனர்.