/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நாளை கரூர் லோக்சபா ஓட்டு எண்ணிக்கை; மணப்பாறை அதிகபட்சமாக 24 சுற்றுகள்

ADDED : ஜூன் 03, 2024 06:58 AM
கரூர் : கரூர் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கை தொடங்கப்படும் நிலையில், மணப்பாறை சட்டசபை தொகுதியில் அதிகபட்சமாக, 24 சுற்றுகள் நடக்கவுள்ளது.
தமிழகத்தில், லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு ஒரே கட்டமாக ஏப்.,19ல் நடந்தது. இதில், பதிவான ஓட்டுக்கள் கரூர் தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில், அமைக்கப்பட்டுள்ள ஓட்டு எண்ணிக்கை மையத்தில் நாளை காலை 8:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. இங்குள்ள, 6 சட்டசபைக்கு தலா, 14 மேஜைகள் வீதம் மொத்தம், 84 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், அரவக்குறிச்சி தொகுதி ஓட்டு எண்ணிக்கையில், 20 சுற்றுகள், கரூர் தொகுதிக்கு, 20 சுற்றுகள், கிருஷ்ணராயபுரத்துக்கு, 19 சுற்றுகள், மணப்பாறை தொகுதிக்கு, 24 சுற்றுகள், வேடசந்துாரில், 23, விராலிமலைக்கு, 19 சுற்றுகள் நடக்கிறது.
ஓட்டு எண்ணிக்கை நாளன்று காலை, 5:00 மணியளவில் ஓட்டு எண்ணிக்கை பணியில் ஈடுபடவிருக்கும், அலுவலர்களுக்கான மேஜை எண் ஒதுக்கீடு செய்யப்படும். பின் ஓட்டுச்சாவடி மையங்களில் பதிவான ஓட்டுகள் அடங்கிய கட்டுப்பாட்டு கருவி, ஓட்டு எண்ணிக்கைக்காக வழங்கப்படும். இந்த கட்டுப்பாட்டு கருவியில் பதிவாகியுள்ள ஓட்டுக்கள் எண்ணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.