/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா
/
பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா
ADDED : ஜூன் 03, 2024 10:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வைகைநல்லூர் ஊராட்சி, புதுப்பாளையத்தில் பகவதி அம்மன், மகா மாரியம்மன், காளியம்மன், விநாயகர், மாசி பெரியண்ணசாமி, மலையாளசாமி, வீர மலையாண்டி, பட்டக்காரன் தெய்வங்கள் அடங்கிய கோயில் அமைந்துள்ளது.
தற்போது கோயில் கட்டுமான பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து இன்று(ஜூன்03) கும்பாபிஷேக விழா நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க கலசத்திற்க்கு புனித நீரினை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது.