/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் கடன் உதவி
/
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் கடன் உதவி
ADDED : ஜூலை 22, 2024 08:45 AM
கரூர் : வாழ்ந்துகாட்டுவோம் திட்டத்தின் கீழ், 66 பேருக்கு மானியத்துடன் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்-டத்தில், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மானி-யத்தில் கடன் வழங்குவது அறிமுகப்படுத்தப்பட்-டுள்ளது. கரூர், குளித்தலை வட்டாரங்களில், 27 பஞ்.,களில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகி-றது. 30 சதவீதம் மானியத்தில், வங்கிகள் மூலம் கடன் உதவி அளிக்கப்படுகிறது. இதுவரை புதிய மற்றும் பழைய தொழில் முனைவோர், 60 பேருக்கு தொழில் கடன் வழங்கப்பட்டுள்ளது. எனவே, 21 முதல், 45 வயதிற்குள் உள்ள சுய உத-விக்குழு உறுப்பினர்கள் அல்லது குடும்பத்தில் யாராவது ஒருவர் சுய உதவிக்குழுவில் இருந்து, தொழில் முனைவோராக விரும்பினால் சி.பி., மதிப்பீடு, பயனாளி பங்கு தொகை போன்ற விதி-களுக்குட்பட்டு கடனுதவி செய்யப்படும். இது தொடர்பாக, கரூர் வட்டாரம் -88255 72239, குளித்-தலை வட்டாரம் - 88078 78175, மாவட்ட அலுவ-லகம் 0431- 2670633 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்-டுள்ளது.