/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'நலம் காக்கும் ஸ்டாலின்' 7,257 பேருக்கு பரிசோதனை
/
'நலம் காக்கும் ஸ்டாலின்' 7,257 பேருக்கு பரிசோதனை
ADDED : செப் 15, 2025 02:03 AM
கரூர்:கரூர் மாவட்டம், சின்னதாராபுரத்தில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்தது. இதில், கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். தமிழ்நாடு துாய்மை பணியாளர் நலவாரிய தலைவர் ஆறுச்சாமி பார்வையிட்டார்.
கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள், வளர்ச்சி குன்றிய குழந்தைகள், நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இதய நோயாளிகள், படுக்கையுற்ற நோயாளிகள், மாற்றுத்திறனாளிகளை இலக்காக கொண்டு இம்முகாம் நடக்கிறது. முகாம் மூலம், 2,745 ஆண்கள், 4,370 பெண்கள் என, மொத்தம், 7,257 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், 23 துாய்மை பணியாளர்களுக்கு நலவாரிய உறுப்பினர் அடையாள அட்டை
களையும், 10 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தையும், காச நோயால் பாதிக்கப்பட்ட, 3 பேருக்கு ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்பட்டது. உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சரவணன், தாட்கோ மேலாளர் முருகதாஸ், துணை இயக்கனர் (சுகாதார பணிகள்) சுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.