sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஆதிதிராவிடர் மாணவ, மாணவியருக்கு ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி

/

ஆதிதிராவிடர் மாணவ, மாணவியருக்கு ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி

ஆதிதிராவிடர் மாணவ, மாணவியருக்கு ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி

ஆதிதிராவிடர் மாணவ, மாணவியருக்கு ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், ஜெர்மனி நாட்டிற்கு நர்சிங் வேலைக்கு செல்லும் ஆதிதிராவிடர், பழங்குடியினத்தவருக்கு தாட்கோ நிறுவனம் மூலம், ஜெர்மன் மொழி பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஜெர்மனி நாட்டில் பி.எஸ்.சி., நர்சிங், பொது நர்சிங் மற்றும் டிப்ளமோ மருத்துவம் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது. நர்சிங் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் வகையில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) நிறுவனம் சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.

இதில் சேர பி.எஸ்.சி., நர்சிங், டிப்ளமோ மருத்துவம், பி.இ., மெக்கானிக்கல் இன்ஜினியரிங், பி.இ., பயோ மெடிக்கல் இன்ஜினியரிங், பி.இ., மின் மற்றும் மின்னணு பொறியியல், பி.டெக் ஆகியவைகளில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம், 3 லட்சம் ரூபாயாக இருக்க வேண்டும். பயிற்சி காலம் 9 மாதம். பயிற்சியின் போது உணவு, தங்கும் விடுதி, பயிற்சி செலவு தொகை போன்றவை தாட்கோ வழங்கும். பயிற்சி முடித்த தகுதியான நபர்களை தேர்வு செய்து, 2.50 லட்சம் முதல், 3 லட்சம் ரூபாய் வரை ஊதியத்துடன் ஜெர்மனி நாட்டின் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும். www.tahdco.com தாட்கோ இணைய தளம் மூலம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

இத்தகவலை, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.




    • Dinamalar Events


    Dinamalar