/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.6.57 லட்சம் மோசடி
/
தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.6.57 லட்சம் மோசடி
ADDED : ஜூன் 01, 2024 01:59 AM
கிருஷ்ணகிரி;ஓசூரை சேர்ந்த ஐ.டி., ஊழியரிடம், பார்ட் டைம் கம்பிளிட் ஜாப் என்ற பெயரில், முதலீட்டு பணம் இரட்டிப்பாகும் என கூறி, 6.57 லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளது.
ஓசூர் அடுத்த தொரப்பள்ளி அக்ரஹாரத்தை சேர்ந்தவர் தேவேந்திரன், 39, ஐ.டி., கம்பெனி ஊழியர். இவரது டெலிகிராம் பக்கத்தில், பார்ட் டைம் கம்பிளிட் ஜாப் என்ற பெயரில் சில லிங்க்குகள் வந்துள்ளது. அதை கிளிக் செய்த தேவேந்திரனுக்கு சிறிதளவு பணம் கிடைத்துள்ளது. பகுதி நேர வேலையில், அடுத்த நிலை என கூறி சில லிங்க்குகளை அனுப்பி அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்புங்கள் என மெசேஜ் வந்துள்ளது.
அதை செய்த தேவேந்திரனுக்கு இன்னும் அதிகமான தொகை கிடைத்துள்ளது. அடுத்தபடியாக 'நீங்கள் இதில் முதலீடு செய்தால் உங்கள் பணம் இரட்டிப்பாகும்' என மெசேஜ் வந்துள்ளது. அதை நம்பி தேவேந்திரன் தன்னிடம் இருந்த, ஆறு லட்சத்து, 57 ஆயிரத்து, 858 ரூபாயை அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். அதன்பின் அவருக்கு எந்த பணமும் வரவில்லை. அவருக்கு மெசேஜ் அனுப்பிய எண்கள், இணையதள பக்கங்கள் முடங்கின. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தேவேந்திரன், இது குறித்து நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி சைபர் கிரைமில் அளித்த புகார்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.