ADDED : ஜூன் 01, 2024 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி;ஊத்தங்கரை
அடுத்த ரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 28,
கூலித்தொழிலாளி.
இவர் கடந்த, 5ல் வீட்டிலிருந்து பைக்கில் சென்று
திரும்பி வரும்போது பைக் இல்லாமல் வந்துள்ளார். இது குறித்து,
கோவிந்தராஜின் தாய் திட்டியுள்ளார். இதில், மனமுடைந்த கோவிந்தராஜ்
கோபித்து கொண்டு சென்றுள்ளார்; மீண்டும் வீடு திரும்பவில்லை. இது
குறித்து கோவிந்தராஜின் தாய் அளித்த புகார்படி ஊத்தங்கரை போலீசார்
விசாரிக்கின்றனர்.