/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூரில் ஓட்டு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனை கூட்டம்
/
ஓசூரில் ஓட்டு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனை கூட்டம்
ADDED : ஜூன் 01, 2024 02:01 AM
ஓசூர்;கிருஷ்ணகிரி லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டுகள் வரும், 4ல் எண்ணப்பட உள்ளன. இதையொட்டி, ஓசூர் சட்டசபை தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனை கூட்டம், ஓசூர் பாகலுார் சாலையில் உள்ள மேற்கு மாவட்ட, அ.தி.மு.க., அலுவலகத்திலும், தளி தொகுதி ஆலோசனை கூட்டம், தேன்கனிக்கோட்டை தனியார் திருமண மண்டபத்திலும் நேற்று நடந்தது.
துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி ஆகியோர், ஓட்டு எண்ணிக்கை முகவர்களை சந்தித்து ஆலோசனை வழங்கினர். கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி வேட்பாளர் ஜெயப்பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார், ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீசன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சென்னகிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் மதன், ஓசூர் பகுதி செயலாளர்கள் ராஜூ, வாசுதேவன், அசோகா, மஞ்சு, கெலமங்கலம் ஒன்றிய செயலாளர் ஜெயபால் உட்பட பலர் பங்கேற்றனர்.