ADDED : ஜூன் 01, 2024 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி;காவேரிப்பட்டணம் அடுத்த மலையாண்டஹள்ளி, கன்னி நகரை சேர்ந்தவர் வனேஷ், 25.
இவர் கடந்த, 29ல், ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில் சென்றுள்ளார். இரவு, 8:30 மணியளவில் திம்மாபுரம் அருகில், தர்மபுரி கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளார். அப்போது பின்னால் வேகமாக வந்த அரசு பஸ் மோதியதில் இறந்தார். காவேரிப்பட்டணம் போலீசார் விசாரிக்கின்றனர்.