/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாங்கனி கண்காட்சி இடத்தை மாற்றக்கோரி பா.ஜ.,வினர் மனு
/
மாங்கனி கண்காட்சி இடத்தை மாற்றக்கோரி பா.ஜ.,வினர் மனு
மாங்கனி கண்காட்சி இடத்தை மாற்றக்கோரி பா.ஜ.,வினர் மனு
மாங்கனி கண்காட்சி இடத்தை மாற்றக்கோரி பா.ஜ.,வினர் மனு
ADDED : மே 25, 2025 12:51 AM
கிருஷ்ணகிரி :கிருஷ்ணகிரி, பா.ஜ., கிழக்கு மாவட்ட தலைவர் கவியரசு தலைமையில், பா.ஜ., நிர்வாகிகள் நேற்று, மாவட்ட கலெக்டர், எஸ்.பி., அலுவலகங்களில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடப்பது வழக்கம். கடந்தாண்டு அரசு ஆடவர் கலைக்கல்லுாரியில் மாங்கனி கண்காட்சி நடந்த நிலையில் நடப்பாண்டில் கிருஷ்ணகிரி டோல்கேட் அருகில், அரசு இடம் அல்லாத, அதுவும், தி.மு.க., மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ.,வுக்கு சொந்தமான இடத்தில் நடக்கவுள்ளதாக பூமிபூஜை செய்துள்ளனர். மாங்கனி கண்காட்சியை, அரசுக்கு சொந்தமான இடத்திலேயே நடத்த வேண்டும். தற்போது தேர்வு செய்துள்ள இடம், கிருஷ்ணகிரி டோல்கேட் அருகில் இருப்பதால், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து அபாயம் உள்ளது. எனவே மாங்கனி கண்காட்சி நடத்தும் இடத்தை மாற்றி அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.