/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஹோட்டல்களில் சோதனை இறைச்சி பறிமுதல்
/
ஹோட்டல்களில் சோதனை இறைச்சி பறிமுதல்
ADDED : ஜன 11, 2024 10:38 PM
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மற்றும் பாகலுார் பகுதியில், உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துமாரியப்பன் தலைமையில், அதிகாரிகள் குழுவினர் ஹோட்டல்களில் போலீசார் பாதுகாப்புடன் சோதனை செய்தனர்.
அப்போது, கெட்டுப்போன, 60 கிலோ சிக்கன், மட்டன், மீன் போன்ற உணவு பொருட்களை பறிமுதல் செய்து, பினாயில் ஊற்றி அழித்தனர். அத்துடன் அழுகிய 15 கிலோ காய்கறிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவற்றை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வைத்திருந்த ஹோட்டல் மற்றும் கடை உரிமையாளர்களை அதிகாரிகள் எச்சரித்தனர்.
மேலும், சில பேக்கரி மற்றும் ஸ்வீட்ஸ் கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த காலாவதியான, ஒன்பது கிலோ இனிப்பு மற்றும் கார வகைகளை பறிமுதல் செய்து அழித்தனர்.
அத்துடன், சம்பந்தப்பட்ட ஹோட்டல், கடை மற்றும் பேக்கரி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டு, 8,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
அதேபோல், உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமலும், சட்ட விதிகளுக்கு புறம்பாகவும் நடத்தி வரும் ஹோட்டல்கள், பேக்கரி, சொகுசு விடுகளின் உரிமையாளர்கள் மீது, நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்தனர்.

