/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைத்து தான் போட்டி; ஜி.கே.மணி
/
லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைத்து தான் போட்டி; ஜி.கே.மணி
லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைத்து தான் போட்டி; ஜி.கே.மணி
லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைத்து தான் போட்டி; ஜி.கே.மணி
ADDED : பிப் 06, 2024 10:20 AM
ஓசூர்: ''வரும் லோக்சபா தேர்தலில், பா.ம.க., கூட்டணி அமைத்து தான் போட்டியிடும். தனித்து போட்டியிடவில்லை,'' என, அக்கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., கூறினார்.
இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் வறட்சி இப்போதே துவங்கி விட்டதால் குடிநீர் பிரச்னை ஏற்படும். இதை போக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மத்திய, மாநில அரசுகள் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.
தமிழக அரசு வேளாண் பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். காவிரி - கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற, அரசுகள் முனைப்பு காட்ட வேண்டும்.
யானை, காட்டுபன்றி விளைநிலங்களுக்கு வராமல் தடுக்க, வனத்துறை சோலார் வேலி அமைக்க வேண்டும். அரசு தனியாக நிதி ஒதுக்கீடு செய்து, விவசாய பயிர்கள் சேதம், உயிரிழப்பிற்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்.
வரும் பார்லிமென்ட் தேர்தலில், 4 முனை போட்டியா, 5 முனை போட்டியா என் தெரியவில்லை. தேர்தல் களம் சூடுபிடிக்கும் போதுதான் தெரியும். யார் எந்த அணியில் இருப்பார்கள் என்பதை சொல்ல முடியவில்லை. பார்லிமென்ட் தேர்தலில், பா.ம.க.,வின் கூட்டணி குறித்து பேசி முடிவெடுக்கும் அதிகாரம், கட்சி நிறுவனர் ராமதாஸிசிடம் வழங்கப்பட்டுள்ளது.
பா.ம.க., கூட்டணி அமைத்து போட்டியிடுமா அல்லது தனித்து போட்டியிடுமா என்ற கேள்வி இருந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கூட்டணி அமைத்து தான் போட்டியிட உள்ளது. எந்த கட்சிகளுடன் கூட்டணி என்பதை, ராமதாஸ் விரைவில் அறிவிப்பார்.
இவ்வாறு, அவர் கூறினார்.
பேட்டியின் போது, முன்னாள் மாவட்ட தலைவர் முனிராஜ், மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்.