/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மக்கள் கோரிக்கை இயக்க நிறைவு நாள் பிரசாரம்
/
மக்கள் கோரிக்கை இயக்க நிறைவு நாள் பிரசாரம்
ADDED : ஜூன் 21, 2025 12:52 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் மா.கம்யூ., கட்சி சார்பில், மக்கள் கோரிக்கை இயக்க நிறைவு நாள் பிரசாரம் நேற்று நடந்தது. மாநகர செயலர் நாகேஷ்பாபு தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார்.
தமிழகத்திற்கு தர வேண்டிய ஜி.எஸ்.டி., தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். தமிழக அரசு ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது.
செயற்குழு உறுப்பினர்கள் மகாலிங்கம், நஞ்சுண்டன், ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, ஒன்றிய செயலாளர் தேவராஜ், முன்னாள் செயலாளர் சேது மாதவன், மாதர் சங்க மாவட்ட தலைவி சரஸ்வதி உட்பட பலர் பங்கேற்றனர். சீனிவாசன் நன்றி கூறினார்.