ADDED : மே 27, 2025 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி, போச்சம்பள்ளி, வடமலம்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ், 30. இவரின் மகன் இமயவன், 12. ஊத்தங்கரையிலுள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். இவரின் நண்பர்களான வடமலம்பட்டியை சேர்ந்த இஸ்தியாக், 14, இந்தியாஸ், 13, ஆகியோருடன் நேற்று மாலை, 4:00 மணிக்கு புளியம்பட்டி, திப்பனுார் ஏரியில் குளித்தார்.
அப்போது இமயவன், இந்தியாஸ் இருவரும் நீரில் மூழ்கினர். இதை பார்த்த இஸ்தியாக் கூச்சலிடவே, அப்பகுதியில் இருந்த மக்கள் வந்து, ஏரியில் மூழ்கிய இருவரையும் மீட்பதற்குள், இமயவன் நீரில் மூழ்கி பலியானார். போச்சம்பள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.