ADDED : செப் 29, 2025 07:27 AM
தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்-டையில், தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், காட்டுப்பன்றி ஒழிப்பு பேரணி மற்றும் மாநாடு நேற்று நடந்தது. மாநில தலைவேணுகோபால் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் உதய-குமார், பொருளாளர் சுபாஷ், துணைத்தலைவர் ஹரிமூர்த்தி முன்னிலை வகித்தனர். மாநில உதவி செயலாளர் கோணப்பன் வரவேற்றார். கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலுார், கோவை, ராணிப்பேட்டை, திருப்பத்துார், ஈரோடு, காஞ்சி-புரம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகள் பேசினர்.
கூட்டத்தில், தமிழகத்தில் விவசாயத்தை அழிக்கும் காட்டுப்பன்றிகளை வனத்துறையும், பொதுமக்களும் கொன்றால் தான், தீர்வு காண முடியும். ஆகவே, பயிர் சேதம் செய்யும் காட்டுப்-பன்றிகளை விவசாயிகள், பொதுமக்கள் கொன்றால் தடுக்கக்கூடாது. அதை தடுத்தால், கிராமமே ஒன்று திரண்டு போராடுவது; அதற்காக 'வாட்ஸாப்' குழுக்கள் அமைப்பது.
காட்டுப்பன்றிகளை கொல்ல அறிவிப்பு வந்த பின், வனத்திற்கு வெளியே வேட்டையாடுபவர்-களை பிடித்து, அபராதம் விதிப்பதை கண்டிக்-கிறோம். யானை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையை, கட்டுப்படுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

