/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தனிஷ்க் ேஷாரூமில் 100 சதவீத தங்க பரிமாற்ற திட்டம்
/
தனிஷ்க் ேஷாரூமில் 100 சதவீத தங்க பரிமாற்ற திட்டம்
ADDED : ஜூன் 09, 2024 02:24 AM

மதுரை, : மதுரை கீழவெளி வீதி தனிஷ்க் ஷோரூமில், 100 சதவீத தங்க பரிமாற்றத் திட்ட அறிமுக விழா நடந்தது. மேலாளர் லட்சுமணன், வணிக மேலாளர் ராம் கவுதம், பொது மேலாளர் ஷீலா ஜெய் பங்கேற்றனர்.
ஷோரூம் நிர்வாக இயக்குனர் ஸ்ரீதேவி சுரேஷ் கூறியதாவது: இத்திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் தங்கத்தின் மீது அதிகபட்ச மதிப்பை பெற முடியும். அதை உறுதிபடுத்தும் வகையில் கழிவேயில்லாத சலுகையை தனிஷ்க் வழங்குகிறது.
எந்த கடையிலிருந்தும் வாங்கப்பட்ட 20 காரட், அதற்கும் மேற்பட்ட பழைய தங்கத்தின் மீது நிபந்தனைகளுடன் 100 சதவீத பரிமாற்ற மதிப்பை வழங்குகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் தங்களுடைய பழைய தங்கத்திற்கு பதிலாக நுணுக்கமான வேலைப்பாடும், சிறந்த கைவினைத்திறனும் கொண்ட புதிய நகைகளாக தரம் உயர்த்திக் கொள்ள முடியும்.
திருமண சீசன் தொடங்கியுள்ளதாலும், தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாலும் வாடிக்கையாளர்கள் பயன்பெற இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
இத்திட்டம் அனைத்து ஷோரூம்களிலும் ஜூன் 30 வரை செல்லுபடியாகும்.