நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான் : இரும்பாடி தடிகார மாயாண்டி சுவாமி கோயில் வைகாசி திருவிழா நடந்தது. வேளார் வீட்டில் இருந்து சுவாமி சிலையை வானவேடிக்கை மேளதாளத்துடன் கோயில் அழைத்து வந்தனர். சிறப்பு பூஜைகளை தொடர்ந்து சுவாமிக்கு திருக்கண் திறப்பு நடந்தது.
பின் சாமியாடிகள் வைகை ஆற்றுக்கு சென்று சுவாமிக்கு எரிசோறு படையல் வழங்கினர். கோயிலில் அலங்கரிக்கப்பட்ட மின்னொளி சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி கிராம வீதிகளில் உலா வந்தார். சிறப்பு அபிஷேக ஆராதனைகளை தொடர்ந்து கிடா வெட்டி பக்தர்கள் வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் கிராமத்தினர் செய்தனர்.