/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி
/
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி
ADDED : ஜூலை 29, 2024 12:34 AM
ஊமச்சிகுளம் : ஊமச்சிகுளத்தைச் சேர்ந்த கொத்தனார் பாண்டியராஜன் 32. 2018ல் இவருக்கும் கார்த்திகாவுக்கும் திருமணம் நடந்து மூன்று, ஐந்து வயதில் மகள்கள் உள்ளனர்.
வாடகை வீட்டில் வசிக்கும் பாண்டியராஜனுக்கு பெற்றோர் ஆதரவு இல்லாததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். மேலும் அவருக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.
தனக்கு ஏதாவது நேர்ந்தால் மனைவி, குழந்தைகள் ஆதரவின்றி தவிப்பார்களே என மனைவியிடம் புலம்பியுள்ளார். கடந்த வெள்ளியன்று குடும்பத்தினருடன் பாண்டியராஜன் அரளி விதையை அரைத்து சாப்பிட்டார்.
மயங்கிய நிலையில் இருந்த குடும்பத்தினரை அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். நேற்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு வயிற்று வலி தான் காரணமா அல்லது கடன் பிரச்னையால் இம்முடிவு எடுக்கப்பட்டதா என்ற கோணங்களில் ஊமச்சிகுளம் போலீசார் விசாரித்தனர்.