/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கபடி போட்டியில் பிரிஸ்ட் பல்கலை வெற்றி
/
கபடி போட்டியில் பிரிஸ்ட் பல்கலை வெற்றி
ADDED : ஜூலை 29, 2024 12:34 AM
மதுரை: மதுரைமாவட்ட தி.மு.க., விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் தென்னிந்திய அளவிலான கபடி போட்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்தது.
நேற்று முன்தினம் துவங்கிய இப்போட்டியில் தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 16 அணிகள் நான்கு பிரிவுகளாக பங்கேற்றன.நேற்று நடந்த பரிசளிப்பு விழாவில் லோக்சபா எம்.பி. தயாநிதி மாறன், அமைச்சர்கள் சக்கரபாணி, மூர்த்தி, எம்.எல்.ஏ.,க்கள் தளபதி, பூமிநாதன் பங்கேற்றனர். முதல் அரையிறுதி ஆட்டத்தில் சென்னை வருமான வரி அணி, கேரளாவின் ஜே.கே.அகாடமி அணியை 38 க்கு 30 என 8 புள்ளிகள் வித்தியாசத்தில் வென்றது. இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் தஞ்சை பிரிஸ்ட் பல்கலை அணி, தமிழக போலீஸ் அணியை 51 க்கு 48 என 3 புள்ளிகள் வித்தியாசத்தில் வென்றது.
இறுதிச் சுற்றில் பிரிஸ்ட் பல்கலை அணி, வருமான வரி அணியை 33 க்கு 24 என 9 புள்ளிகள் வித்தியாசத்தில் கோப்பை வென்றது.