/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குறைமாத கர்ப்பிணிக்கு பிரசவமான 2 குழந்தைகள் சிகிச்சை அளித்த டாக்டருக்கு பாராட்டு

ADDED : ஜூன் 14, 2024 05:16 AM
மேலுார்: ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த தாயையும், சேய்களையும் காப்பாற்றிய டாக்டரை பொதுமக்கள் பாராட்டினர்.
வெள்ளலுார் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்வகுமாரி 28, என்பவர் பிரசவ வலியுடன் ஆபத்தான நிலையில் வந்தார். அவரை பரிசோதித்த வட்டார மருத்துவ அலுவலர் அம்பலம் சிவனேசன் அவசர பிரசவம் பார்த்தார். அப்பெண்ணுக்கு 37 நிமிட இடைவெளியில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தது.
இரண்டாவதாக பிறந்த பெண் குழந்தை மூச்சு விடாமல் இருக்கவே டாக்டர் சிவனேசன் உரிய சிகிச்சை அளித்து குழந்தையை காப்பாற்றினார். மகப்பேறு மற்றும் மயக்க மருந்து டாக்டர்கள் இல்லாமல் 2 குழந்தைகளையும் காப்பாற்றிய டாக்டர், தாய் மற்றும் இரண்டு சேய்களை ஆம்புலன்ஸ் மூலம் 50 கி.மீ., தொலைவில் உள்ள மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகப்பிரசவத்தில் இரட்டை குழந்தையை காப்பாற்றிய வட்டார மருத்துவ அலுவலரை அனைவரும் பாராட்டினர்.