/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'நோ பார்க்'கிங்கில் வாகனம் ஆக்கிரமிப்பு
/
'நோ பார்க்'கிங்கில் வாகனம் ஆக்கிரமிப்பு
ADDED : ஜூன் 14, 2024 05:15 AM
மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷன் முதன்மை புக்கிங் அலுவலகம் அருகே நோ பார்க்கிங் பகுதியில் இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதால் பயணிகள் செல்ல சிரமப்படுகின்றனர்.
ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. கட்டட பணிக்கு வரும் ஊழியர்கள் வேலை நடக்கும் இடத்திற்கு அருகிலேயே தங்கள் வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர். இதையடுத்து பொதுமக்களும் அதே இடத்தில் வாகனங்களை நிறுத்துவதால் டிக்கெட் முன்பதிவு செய்ய வரும் பயணிகளுக்கு இடையூறாக உள்ளது.
கட்டணம் செலுத்தி வாகனங்களை நிறுத்தும் பகுதியும் அவ்வப்போது வாகனங்களால் நிரம்பி வழிவதால், பார்க்கிங் வசதியின்றி பயணிகள் சிரமப்படுகின்றனர். இதனால் ரயில்வே வாரியம் வாகனங்களை நிறுத்த பிரதான நுழைவாயில் பகுதியில் இட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.