/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள் புலம்பல்
/
பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள் புலம்பல்
ADDED : ஜூலை 26, 2024 06:23 AM
பேரையூர் : பேரையூர் பகுதிகளில் பி.எஸ்.என்.எல்., இணைய தள மற்றும் சிக்னல் பிரச்சனை அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., ப்ரீபெய்டு, போஸ்ட் பெய்டு என பல சேவைகளை குறைந்த கட்டணத்தில் வழங்கி வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 4ஜி சேவையை அறிமுகப்படுத்தும் பணிகளும் நடந்து வருகின்றன. இந்நிலையில் பேரையூர் பகுதிகளில் நெட்வொர்க் பிரச்னை, இணையதள சிக்னல் பிரச்னை தொடர்கதை ஆகி வருகிறது. குறைந்த கட்டணத்தில் ரீசார்ஜ் வழங்கினாலும் அடிப்படை சேவைகளில் தொடர்ந்து பிரச்னை ஏற்படுவதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
அவர்கள் கூறியதாவது: சரியாக சிக்னல் கிடைக்காததால் அவசரத்திற்கு உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாமல் உள்ளது. இப்பகுதியில் பல இடங்களில் சிக்னல் கிடைப்பதில்லை. கிராமப்புறங்களில் உள்ளவர்கள் மாடியில் ஏறி நின்றால் தான் அலைபேசியை பயன்படுத்தும் நிலை உள்ளது என்றனர்.