/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தங்கம் வென்ற சிறுமிக்கு கமிஷனர் பாராட்டு
/
தங்கம் வென்ற சிறுமிக்கு கமிஷனர் பாராட்டு
ADDED : ஜூலை 26, 2024 06:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : கோவையில் நடந்த மாநில அளவிலான தடகள போட்டிகளில் தங்கம் வென்ற மதுரை சிறுமி ஹர்ஷினியை போலீஸ்கமிஷனர் லோகநாதன் பாராட்டினார்.
மதுரை நகர் தல்லாகுளம் போலீஸ் ஸ்டேஷன் சிறுவர் மன்றம் சார்பில் 17 வயதுக்கு உட்பட்ட சிறுமியர் இப்போட்டிகளில் பங்கேற்றனர்.
இதில் குண்டு எறிதல் போட்டியில் ஹர்ஷினி தங்கம் வென்றார். அவரை கமிஷனர் லோகநாதன் பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் தல்லாகுளம் போலீசார், தடகள போட்டி பயிற்சியாளர்கள் பங்கேற்றனர்.