/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும்
/
திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும்
ADDED : ஜூன் 08, 2024 06:19 AM
மதுரை: கல்வி நிறுவனங்களில் மாணவர்களும், ஆசிரியர்களும் தங்கள் திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தி வளர்ச்சிக்கான அடித்தளத்தை உருவாக்க வேண்டும் என காந்தி கிராம பல்கலை துணைவேந்தர் பஞ்சநதம் பேசினார்.
மதுரை தியாகராஜர் கல்வியியல் கல்லுாரியின் 68வது கல்லுாரி தினம் முதல்வர் பிரகாஷ் தலைமையில் நடந்தது. அவர் ஆண்டறிக்கை சமர்பித்தார். துணைவேந்தர் பஞ்சநதம் பேசுகையில், கல்வி வளர்ச்சிக்கு ஆசிரியர், மாணவர் என இருவரின் பங்கும் அவசியம். கற்றல் கற்பித்தலில் அனைத்து வகுப்புகளுக்குமே முழுமையான தயாரிப்பில் ஈடுபட வேண்டும். வகுப்பறை செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும். ஆசிரியர், மாணவர்களின்திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்றார். மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியர்கள் பங்கேற்றனர்.